பால முனீஸ்வரர் கோவிலில் ஊரணி பொங்கல் விழா
ஆரணியில் பால முனீஸ்வரர் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் அமைந்துள்ள பால முனீஸ்வரர் கோவில் வளாகத்தில் தை மாதத்தையொட்டி ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பொதுமக்கள், பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து சாமியை வழிபாடு செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) பகலில் கறிவிருந்தும், மாலையில் கலை நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story