மர்மநபர்கள் தீ வைத்ததில்வேரோடு சாய்ந்த மரம்


மர்மநபர்கள் தீ வைத்ததில்வேரோடு சாய்ந்த மரம்
x
நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் சாலையோரம் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. இந்தநிலையில் அந்த மரத்தின் வேர் பகுதியில் நேற்று மர்மநபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த மரம் வேரோடு பெயர்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது. இதனால் அந்த வழியே வாகனங்கள் சற்று சிரமத்துடன் சென்று வந்தன. அதைத்தொடர்ந்து அது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து வழக்கம் போல நடந்தது.


Next Story