நாங்குநேரியில் வருகிற 15-ந்தேதி ரெயில் மறியல்; காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து நாங்குநேரியில் வருகிற 15-ந்தேதி ரெயில் மறியல் நடத்துவது என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
களக்காடு:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் களக்காட்டில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சமிதி மாவட்ட தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா, நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், வட்டார தலைவர்கள் ராதாபுரம் முருகன், வள்ளியூர் அருள்தாஸ், நாங்குநேரி முத்துகிருஷ்ணன், சேரன்மகாதேவி ராமச்சந்திரன், களக்காடு பிராங்ளின், நாங்குநேரி வடக்கு வாலசுப்பிரமணியன், நகர தலைவர்கள் நாங்குநேரி சுடலைக்கண்ணு, சேரன்மகாதேவி பொன்ராஜ், ஏர்வாடி அபுபக்கர், மூலைக்கரைப்பட்டி ராதாகிருஷ்ணன், களக்காடு ஜெபஸ்டின்ராஜ், மற்றும் வெங்கடேஷ் தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல்காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து நாங்குநேரியில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. ஏர்வாடியில் வருகிற 20-ந்தேதி தபால் அலுவலகத்தை முற்றுகையிடுவது. மேலும் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டை அனுப்புவது. தெருமுைன பிரசாரங்களில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் களக்காடு இந்திராகாந்தி சிலை அருகில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னதாக காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.