தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர்-திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காசி, ஏகலைவன், முரளி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி மற்றும் சிலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், அரசியல் அமைப்பு சட்டம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட வரையறைகளை பாதுகாத்திட வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வெள்ளைநாயக்கனேரி பகுதியில் தலித் மக்களின் சுடுகாட்டு பாதையை பறிப்பதை கைவிட்டு மாவட்ட நிர்வாகம் கொடுத்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை நடைமுறைப்படுத்தி பாதை அமைத்து தர வேண்டும். பரதராமி அருகே கல்லூரி மாணவியை இழிவுப்படுத்தி பேசி தாக்கிய நபர்கள் மீதான வழக்கை விரைந்து நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story