சென்னையில் வரலாறு காணாத மழை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கவர்னர் வேண்டுகோள்


சென்னையில் வரலாறு காணாத மழை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கவர்னர் வேண்டுகோள்
x

வரலாறு காணாத பெருமழையால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிக்ஜம் புயலால் கிழக்கு கடலோர மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story