எஸ்.புதூர் யூனியன் கூட்டம்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண யூனியன் கூட்டம் நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண யூனியன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் விஜயா குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரவு- செலவு உள்பட மன்ற பொருளாக 16 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அதனை கூட்டம் அங்கீகரித்தது. அதனை தொடர்ந்து அந்தத்துறை சார்ந்த அதிகாரிகள் அரசு திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினர். இதில் வேளாண் துறையில் உள்ள மானிய சலுகைகள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் எடுத்துக்கூறினார்.
ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார் கூறும்போது, எஸ்.புதூர் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் 18 கிராம சாலைகள் வரும் நிதியாண்டில் வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். உலகம்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் பேசுகையில், பொதுமக்கள் பங்களிப்புடன் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி குற்றசெயல்களை தடுக்க கோரிக்கை விடுத்தார். கூட்டத்தில் துணை தலைவர் வீரம்மாள் பழனிசாமி, கவுன்சிலர்கள் ரேவதி செல்வராஜ், விஜயா கருப்பையா, ராஜாத்தி சிங்காரம், இந்திராகாந்தி சத்தியமூர்த்தி, சின்னம்மாள் மென்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் நன்றி கூறினார்.