வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி


வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி
x

வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்,

வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களை சார்ந்த 246 அரசு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு 3 பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான போட்டிகள் 8 ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது. வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவில் 146 மாணவர்கள் பங்கேற்ற செஸ் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் அமுதவல்லி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டியை வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல்குமார் தலைமை ஆசிரியர் இரவி மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story