சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்
சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேளாண் வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும், ஏரியூர் வடவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 35,77,962 ரூபாய்க்கான 16 தீர்மானங்களை அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ மன்ற பொருளாக வாசித்து ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன் வைக்கப்பட்டது. பின்னர் ஒன்றிய குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது அப்துல்லா நன்றி கூறினார்.