மேலவண்ணாரிருப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும் எஸ்.புதூர் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
மேலவண்ணாரிருப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும் என எஸ்.புதூர் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
எஸ்.புதூர்
மேலவண்ணாரிருப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும் என எஸ்.புதூர் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் விஜயா குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக எஸ்.புதூர் ஒன்றியத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் மன்ற பொருளாக 36 தீர்மானங்கள் வைக்கப்பட்டது. அவற்றை கூட்டம் அங்கீகரித்தது. இதில் பொது செலவினம், வரவு- செலவு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு அரசு துறை அலுவலர்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினர்.
சாலை சீரமைக்க கோரிக்கை
மேலும் 6- வது வார்டு கவுன்சிலர் சின்னம்மாள் மென்னன் கூறும்போது மேலவண்ணாரிருப்பு பகுதிகளில் சேதமடைந்துள்ள மேலவண்ணாரிருப்பு, உரத்துப்பட்டி சாலைகளை சீரமைக்க கோரிக்கை வைத்தார். துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி கூறுகையில் கிராமப்புற பகுதியான எஸ்.புதூர் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அதிக அளவில் பணியாளர்களை நியமித்து பணியை துரிதப்படுத்த கோரிக்கை வைத்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி செல்வராஜ், விஜயா கருப்பையா, ராஜாத்தி சிங்காரம், இந்திராகாந்தி சத்தியமூர்த்தி உள்பட அரசு துறை அலுவலர்கள், அரசு ஒப்பந்தகாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.