திருவெண்ணெய்நல்லூர்ஒன்றியக்குழு கூட்டம்


திருவெண்ணெய்நல்லூர்ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைதலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். பிரிவு உதவி அலுவலர் அன்பு தீர்மானங்களை வாசித்தார். குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பேசினர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story