சின்னசேலம்ஒன்றியக்குழு கூட்டம்
சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பழனிவேல் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் திருவேங்கடம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தார் சாலை அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடி தண்ணீர் வசதி, கழிவு நீர் கால்வாய், சிறு பாலங்கள், கழிப்பறை வளாகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது, பொது சுகாதாரம் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி, அங்கன்வாடி சத்துணவு கூடம் பராமரிப்பு பணிகள், பள்ளி சுற்றுசுவர் போன்ற வளர்ச்சி திட்ட பணிகள் நிதிநிலை ஆதாரங்களுக்கு ஏற்ப அனைத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து பணிகள் மேற்கொள்வது என்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர் ராஜசேகர், ஒன்றிய அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.