செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தடையில்லா மின்சாரம் - புதிய டிரான்ஸ்பார்ம் அமைப்பு


செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தடையில்லா மின்சாரம் - புதிய டிரான்ஸ்பார்ம் அமைப்பு
x

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல், ஆகஸ்ட் 10 வரை, சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் பூஞ்சேரி "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கம் 70 ஆயிரம் ச.அடி., பரப்பளவு கொண்டது. ஆனால் கூடுதலாக 50 ஆயிரம் ச.அடி தேவை என்று இந்திய செஸ் கூட்டமைப்பினர் தமிழக அரசிடம் கேட்டனர்.

இதையடுத்து போட்டி நடைபெறும் அரங்கின் வடபகுதியில் இருந்த திறந்தவெளி கார் நிறுத்தம் பகுதியை, அரங்கமாக மாற்றிக் கொடுக்க அரசு ஒப்புக்கொண்டது., உடனடியாக அங்கிருந்த மரங்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து பிரமாண்டனமான தற்காலிக விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தது.

இந்நிலையில் புதிய அரங்கத்திற்கு தேவையான மின்சாரம் வசதிகள் தங்களிடம் இல்லை என அரங்கத்தின் நிர்வாகம் கூறியதால். தமிழக மின் வாரியம் ஆலத்தூர், பூஞ்சேரி துணை மின் நிலையங்களின் உயர அழுத்த மின் தடத்தில் அரங்கம் அருகே புதிய டிரான்ஸ்பார்ம் அமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்தது.

24 மணி நேரமும் மின் தடங்கல் வராத வகையில், மின் தட வயர்களில் புதிய பாலிமர் இன்சுலேட்டர்களும் பொறுத்தப்பட்டது. இதை தினசரி கவனிக்க 10 க்கும் மேற்பட்ட சிறப்பு மின் பொறியாளர்களை மின்சார வாரியம் நியமித்துள்ளது.


Next Story