குரும்பட்டி கிராமத்தில்ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பட்டி கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் சசிகலா தசரா தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா காளியப்பன், அஸ்லாம், நிர்வாகிகள் மோகன், கோவிந்தசாமி, தி.மு.க. நிர்வாகிகள் பாஸ்கரன், கே.பி.செல்வம், குப்புசாமி, ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story