விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணி


விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணி
x

அருப்புக்கோட்டையில் விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக நகரசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக நகரசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் அவசர கூட்டம் நகரசபை தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

பாலசுப்ரமணியம்:- எங்களது வார்டில் நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் நிறம் மாறி வருகிறது. அதுவும் உப்பு தண்ணீராக வருகிறது.

தனலட்சுமி:- சாமி அம்பலம் தெருவில் 60 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் நிலை அறிந்து புதிய ரேஷன் கடை கட்டித் தர முன் வரவேண்டும். பழைய மினி பவர் பம்பை அகற்றிவிட்டு புதிய மினி பவர் பம்ப் அமைத்து தர வேண்டும்.

ஆக்கிரமிப்பு

டுவிங்கிளின் ஞான பிரபா:- 5-வது வார்டு பகுதியில் வாருகால் அமைக்கும் பணி முழுமை அடையாமல் அரைகுறையாக கிடக்கிறது. பெர்கின்ஸ்புரம், ெரயில்வே பீடர் ரோடு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.

ஜெய கவிதா:- பலமுறை கோரிக்கை வைத்தும் டாஸ்மாக் கடை இன்னும் அகற்றப்படவில்லை. 16 வார்டுகளில் இருந்து வரும் கழிவு நீர் எங்கள் பகுதி வாருகாலில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

ராம திலகவதி:- புதிய சின்டெக்ஸ் அமைத்து பல மாதங்களாகியும் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

பாதாள சாக்கடை

மீனாட்சி-: உச்சி மாகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஓடையை தூர்வார வேண்டும்.

சிவப்பிரகாசம்:- அரசின் பல்வேறு திட்டங்கள் நகராட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளிலும் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு, விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற உள்ளது.

நகரசபைத்தலைவர்:- கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Next Story