கீழடி அருங்காட்சியகத்தை ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் வந்தார்.
திருப்புவனம்
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் வந்தார். அவரை கீழடி பிரிவு இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர் அஜய் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கீழடி வரலாறு குறித்த ஆவண படத்தையும் மினி தியேட்டரில் அமர்ந்து பார்வையிட்டார். அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட பின்பு நிருபர்களிடம் கூறியதாவது:- கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களில் 8000 பொருட்களை காட்சிப்படுத்தியும் ஆவணப்படுத்தி அருங்காட்சியகத்தை உருவாக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். நிலமும், நீரும், விளையாட்டு, வணிகம், நாணயங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். இன்றைய இளைஞர்கள் நமது பழமையை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். தினமும் சுமார் 2000 பேர்கள் வீதம் அருங்காட்சியத்திற்கு வருகை தருவதாகவும் இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து பார்வையிற்றனர் என்ற பதிவு சிறப்பானதாகும். கீழடி அகழ்வாராய்ச்சியில் நாம் தெரிந்து கொண்டது ஓலைச்சுவடிக்கு முன்னதாக கல்வெட்டு, இதற்கு முன்னதாக சுட்ட மண்ணில் எழுத்துக்கள், குறியீடுகள் உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி கண்டறியப்பட்ட பொருட்களில் மதம், ஜாதி அடையாளம் ஏதும் கிடையாது. மத்திய அரசு கண்டறிந்த பொருட்களை வெளிப்படுத்த தடையாக இருந்தது. அவைகளை முறியடித்து தமிழர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு என்றார். பின்பு அருங்காட்சியகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.