உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சராகும் ஆற்றல் இருக்கிறது - அமைச்சர் சாமிநாதன்


உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சராகும் ஆற்றல் இருக்கிறது - அமைச்சர் சாமிநாதன்
x

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சராகும் ஆற்றல் இருக்கிறது என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பூர்

திருப்பூரில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக்கும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, அதற்கு வலுவோடு எங்களின் வழிமொழிதலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு மேலும் ஏற்றத்தை தரும் முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று செம்மையாக இந்த அரசை வழிநடத்தவும், உறுதுணை புரியும் ஆற்றலும் அவரிடம் உள்ளது.

அதிமுக ஆட்சியின்போது சட்டம்-ஒழுங்கு கெட்டதைப்போல் இப்போது இல்லை. திமுக. ஆட்சியில் சில பிரச்சினைகள் எழுந்தாலும் உரிய முறையில் நடுநிலையோடு நின்று காவல்துறை மூலமாக உரிய குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்கப்படுகிறது. அவர்களை போல் துப்பாக்கி சூடு நடத்தாத அரசு திமுக அரசு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story