மின்கம்பம் பெயர்ந்து விழுந்து இருசக்கர வாகனம் சேதம்
சாத்தூர் அருகே மின்கம்பம் திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்ததில் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. உடனே மின்சாரம் துண்டிப்பால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே மின்கம்பம் திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்ததில் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. உடனே மின்சாரம் துண்டிப்பால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மின்கம்பம் பெயர்ந்து விழுந்தது
சாத்தூர் அருகே வன்னிமடையில் சேதம் அடைந்திருந்த மின்கம்பம் ஒன்று நேற்று காலையில் திடீரென சாய்ந்து கீழே விழுந்தது. அப்போது வீட்டின் எதிர்புறம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் மீது மின்கம்பம் விழுந்ததால் அது சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக மின்கம்பம் கீேழ விழுந்த சமயத்தில் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து மின்வினியோகத்தை துண்டித்தனர்.
பழைய மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை
இதையடுத்து மின்சார துறையினர் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். சாத்தூர் சுற்று வட்டாரங்களில் இது போன்ற ஆபத்தான மின்கம்பங்கள் எவை என கணக்கெடுத்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.