2 மாட்டு வண்டிகள் பறிமுதல்


2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள கீழத்திருப்பூந்துருத்தி நடுப்படுகையை சேர்ந்தவர் முருகேசன் மகன் சகாதேவன் (28). இவர் ஒரு மாட்டு வண்டியிலும், அதே நடுப்படுகையை சேர்ந்த அழகேசன் மகன்கள் மகேந்திரன் (27), ரஞ்சித் (25) ஆகிய இருவரும் மற்றொரு மாட்டு வண்டியிலும் காவேரி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர். ஸ்ரீராம் நகர் வழியாக திருவையாறுக்கு வந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு போலீசார் 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.உடனே 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் சகாதேவன், மகேந்திரன், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story