தூத்துக்குடி வரத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வரத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
வரதவிநாயகர் ஆலயம்
தூத்துக்குடி 2-ம் ரெயில்வே கேட் அருகே வரதவிநாயகர் கோவில் அமைந்து இருந்தது. இந்த கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை தொடர்ந்து, அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டது. அங்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. இந்த ஆலய கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தி.மு.க. நகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.