தூத்துக்குடி 4-ம் கேட் மூடப்பட்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி


தூத்துக்குடி 4-ம் கேட் மூடப்பட்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி 4-ம் கேட் மூடப்பட்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி

மதுரை-தூத்துக்குடி இடையேயான இரட்டை ரெயில்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பல்வேறு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து கீழுர் ரெயில் நிலையம் வரையிலான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மீளவிட்டானில் இருந்து மேலூர் ரெயில் நிலையம் வரையில் முதல்கட்டமாக பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இதற்காக மேலூர் ரெயில்நிலையம் மூடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வி.வி.டி சிக்னல் செல்லும் ரோட்டில் அமைந்து உள்ள 4-வது ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களை இணைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 4-ம் கேட் முழுமையாக மூடப்பட்டது. இதனால் தூத்துக்குடி 3-ம் கேட் மேம்பாலம் வழியாக அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


Next Story