போராட்ட களத்தை வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் தங்கம் தென்னரசு


போராட்ட களத்தை வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் தங்கம் தென்னரசு
x

போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

எம்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தற்போதைய சூழலில் என்.எல்.சி. யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது. அதை செய்தால்தான் சுரங்கத்தின் மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். அப்போது தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால் தான் நமக்கு உரிய மின்சாரம் கிடைக்கும்.

எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நில உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் அனுமதிக்காது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story