தூத்துக்குடியில் துடிசியா தொழில் கண்காட்சி
தூத்துக்குடியில் துடிசியா தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
தூத்துக்குடி துடிசியா தலைவர் நேருபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை துடிசியா சார்பில் தொழில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் திருமண மண்டபத்தில் வைத்து துடிசியாதொழிற் கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழிற்சாலைகள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் வாங்குவோர், விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் நடக்கிறது. வாங்குவோர் விற்போர் கருத்தரங்கில் வ.உ.சிதுறைமுகம், கூடங்குளம் அனுமின் நிலையம், டி.சி.டபிள்யூ, ஸ்பிக், என்.டி.பி.எல் அனல்மின்நிலையம் மற்றம் பல நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா முழுவதும் இருந்து பல தொழிற்சாலைகள் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு நடக்கிறது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.