டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை - சி.வி.சண்முகம் பேட்டி
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை.ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. என தெரிவித்தார்.
புதுடெல்லி,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் , தேனி எம்.பி. ரவீந்திரநாத் க்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி. சிவி சண்முகம் மனு அளித்துள்ளார்.
அதில் , தேனி எம்.பி. ரவீந்திரநாத் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக எம்.பி. என அங்கீகரிக்க கூடாது என சிவி சண்முகம் மனுவில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்தபின் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது ,
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை.ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை .அதிமுக இயக்கத்தை பிளவுபடுத்தியவர் ஓபிஎஸ், அவர் ஒரு திமுகவின் விசுவாசி. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் . என தெரிவித்தார்.