இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 Dec 2023 3:18 PM IST (Updated: 26 Dec 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம்.

சென்னை,

19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.

இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் மாண்டு போனார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்வின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம்.

சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம். அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம், என பதிவிட்டுள்ளார்.


Next Story