மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு

ஈரோடு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகராறு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல். இவருடைய மகன் தமிழரசன் (வயது 29). ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் சக தொழிலாளர்களுடன் ஈரோடு நாச்சியப்பா வீதியில் தங்கி உள்ளார். இவருக்கும், ஒப்பந்ததாரரின் அலுவலக காசாளருக்கும் இடையே கடந்த வாரம் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த பிரச்சினை கைகலப்பில் முடிந்தது. இதுதொடர்பாக ஈரோடு டவுன் போலீசில் தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவர்களை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தார்கள். நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தமிழரசன் நேற்று மதியம் 3.10 மணிஅளவில் இதுபற்றி புகார் மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து உள்ளார். அப்போது அந்த அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அவர் மறைத்து வைத்திருந்த ஒரு கேனை எடுத்து, அதில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீசார் விரைந்து சென்று தமிழரசனை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அவரிடம் இருந்த டீசல் கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள்.

இதையடுத்து தமிழரசனிடம் கோரிக்கையை கேட்டறிந்த போலீசார் அவரை ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story