பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்


பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
x

பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்காசி

செங்கோட்டை:

தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் போலீசார் சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து தென்காசிக்கு வந்த 2 கனரக லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் பிளாஸ்டிக் கழிவுகள், நெகிழி பைகளின் கழிவுகள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அதனை தென்காசி மாவட்டத்தில் உள்ள இடத்தில் கொட்டி செல்வதற்கு முயன்றதும் தெரியவந்தது. பின்பு 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நெல்லையில் இருந்து சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் ஜெபா தலைமையிலான குழுவினர் தென்காசிக்கு நேரடியாக சென்று கழிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் லாரி டிரைவர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி நடுத்தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 33), கவுதம் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story