லாரி கவிழ்ந்து விபத்து
கூடலூருக்கு விறகுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சை தேயிலையை அரைத்து தேயிலைத்தூளாக மாற்றுவதற்கு விறகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து லாரிகளில் விறகுகள் கொண்டு வரப்படுகிறது, இந்தநிலையில் கேரளாவில் இருந்து விறகுகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தேவர்சோலை வழியாக கூடலூர் வந்து கொண்டிருந்தது. அப்போது சர்க்கார் மூலா பகுதியில் சாலையோரம் லாரி சென்ற போது திடீரென பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிைரவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். சாலையின் இடது புறம் கவிழ்ந்ததால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. தொடர்ந்து லாரியை நிலை நிறுத்தும் பணியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்னர் பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு லாரி நிலை நிறுத்தப்பட்டது.