கலெக்டரின் தந்தையை பாம்பு கடித்து சிகிச்சை
கலெக்டரின் தந்தையை பாம்பு கடித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக ஜானிடாம் வர்கீஸ் பணியாற்றி வருகிறார். இவருடன் அவரின் தந்தை ஜார்ஜ் வர்கீஸ் (வயது 69) என்பவர் தங்கி உள்ளார். நேற்று மாலை ஜார்ஜ் வர்கீஸ் கலெக்டர் இல்ல முகாம் அலுவலக பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அவரை கலெக்டர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தார். டாக்டர்கள் ஜார்ஜ் வர்கீசுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். விஷமற்ற சாதாரண பாம்புதான் என்று கூறப்படுகிறது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இங்கு பாம்புகள் பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story