சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை


சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 3 Jan 2024 5:35 PM IST (Updated: 3 Jan 2024 6:31 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் தரப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

சென்னை,

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் அறிவித்திருந்தன. இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. இந்தநிலையில்,

சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் தரப்பட்ட நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது.


Next Story