காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா


காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா
x

காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

ராணிப்பேட்டை

காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

திமிரியை அடுத்த காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா, 37 -ம் ஆண்டு நிறைவு விழா, சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி நிர்வாகி ஆர். சேட்டு தலைமையில் நடைபெற்றது. பள்ளி கணக்காளர் கே.லட்சுமி, கணினி ஆசிரியர் எம். சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எம். கோபி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு 50 மாணவர்களுக்கு திருக்குறள், ஆங்கில அகராதி புத்தகங்களையும் சிறந்=த மதிப்பெண்கள் எடுத்த மற்றும் சிறப்பாக தமிழ் பேசிய மாணவர்களுக்கும் பதக்கங்கள் பரிசுகளையும் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் திமிரி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெ.ரமேஷ், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜே.அம்பேத்கர், குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சி.காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியை எஸ்.பிரேமலதா நன்றி கூறினார்.



Next Story