மாநில கைப்பந்து போட்டியில் திருச்சி அணிகள் தேர்வு


மாநில கைப்பந்து போட்டியில் திருச்சி அணிகள் தேர்வு
x

மாநில கைப்பந்து போட்டிக்கான திருச்சி அணிகள் தேர்வு நடைபெற்றது.

திருச்சி

மாநில கைப்பந்து போட்டிக்கான திருச்சி அணிகள் தேர்வு நடைபெற்றது.

கைப்பந்து போட்டி

தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பில் மாநில இளைஞர் கைப்பந்து போட்டி வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை விருதுநகரில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் திருச்சி ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு கருமண்டபத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடந்தது.

இதில் ஆண்கள் அணிக்கான தேர்வில் 50 வீரர்களும், பெண்கள் அணிக்கான தேர்வில் 20 வீராங்கனைகளும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தேர்வு

வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் தங்க பிச்சையப்பா, செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் அணியை தேர்வு செய்தனர்.


Next Story