திருச்சி மாநகராட்சி துணை மேயர், கவுன்சிலர்கள் தெலுங்கானா பயணம்


திருச்சி மாநகராட்சி துணை மேயர், கவுன்சிலர்கள் தெலுங்கானா பயணம்
x

திருச்சி மாநகராட்சி துணை மேயர், கவுன்சிலர்கள் தெலுங்கானா பயணம் மேற்கொண்டனர்.

திருச்சி

திருச்சி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாமா - "சர்குலேஷன் வேஸ்ட் சொல்யூஷன்" திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா உள்பட பெண் கவுன்சிலர்கள் 28 பேர் தெலுங்கானா மாநிலம் சித்தி பேட் நகராட்சிக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் நாளை முதல் 14-ந்தேதி வரை 3 நாள் களப்பயணம் மேற்கொண்டு அந்த நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'திடக்கழிவு மேலாண்மை' பணிகளை பார்வையிட்டு, குப்பைகளை சரியான முறையில் கையாளுவதற்கும் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லா வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கான பல்வேறு திட்டங்களை அறிந்து கொள்ள உள்ளனர். களப்பயணம் மேற்கொள்ள உள்ள பெண் கவுன்சிலர்களை மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.


Next Story