திருச்சி-ஈரோடு ரெயில் நேரத்தில் மாற்றம்


திருச்சி-ஈரோடு ரெயில் நேரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 27 July 2022 12:42 AM IST (Updated: 27 July 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-ஈரோடு ரெயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி-ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் காலை 6.50 மணிக்கு திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேரம் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில் இனி திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டை காலை 11.30 மணிக்கு சென்றடையும். அதுபோல் இனி குளித்தலைக்கு காலை 7.57 மணிக்கும், கரூருக்கு 8.53 மணிக்கும், புகழூரை 9.15 மணிக்கும், சென்றடையும். இந்ததகவலை திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story