சங்கரலிங்கனார் உருவப்படத்திற்கு மரியாதை
கோவில்பட்டியில் சங்கரலிங்கனார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த அண்ணா சட்டசபையில் கடந்த 1968-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று அறிவித்தார். அந்த நாளை போற்றும் வகையில் கோவில்பட்டி புதுரோட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்கம் சார்பாக, தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக 79 நாட்கள் உண்ணா விரதமிருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனார் நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சேகர், கிருஷ்ணசாமி, முத்துசாமி, கண்ணாயிரம், ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story