பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் - வனத்துறை அமைச்சர்


பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் - வனத்துறை அமைச்சர்
x

பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தினார்.

ஊட்டி,

உலக பூர்வகுடிகளை நினைவு கூறும் வகையில் ஊட்டியில் சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது. பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நடந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு சாதனைகள் புரிந்த பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் 19 மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று, அவர்களின் குறைகளை கேட்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் பழங்குடியின மக்களின் குறைகளை கேட்கும் வகையில், குறை தீர்ப்பு கூட்டங்களை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். தற்போது பழங்குடியின மக்களுக்கு வனத்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. வனத்துறை வேலைவாய்ப்பில் 30 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 272 பழங்குடியின கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழங்குடியின கிராமங்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.16 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்காக ரூ.50 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதனை 100 கோடியாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story