தென்காசியில் அகற்றப்பட்ட மரங்கள் ஆலங்குளத்தில் மறுநடவு
தென்காசியில் அகற்றப்பட்ட மரங்கள் ஆலங்குளத்தில் மறுநடவு செய்யப்பட்டது.
ஆலங்குளம்:
தென்காசி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சக்தி நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மருத்துவர்கள், தங்கள் காலிமனையில் வீடு கட்டும் பணி தொடங்க இருந்தனர். அங்கு மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது. மரங்களை விறகிற்காக வெட்டுவதற்கு மனமின்றி அதனை வேருடன் அகற்றி மறு நடவு செய்வதற்கு முடிவு செய்தனர்.
இதற்காக ஆலங்குளத்தில் உள்ள பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்களை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து தென்காசி சென்ற தன்னார்வலர்கள் அங்கிருந்த வேம்பு, புங்கை உள்ளிட்ட 3 மரங்களை வேருடன் எடுத்து வாகனம் மூலம் ஆலங்குளம் கொண்டு வந்தனர். ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் முன்பு ஆலங்குளத்தை சேர்ந்த மருத்துவரான புஷ்பலதா ஜான் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் மறு நடவு செய்தனர். மரம் நடும் நிகழ்வில் பசுமை இயக்கம் தன்னார்வலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.