கோடியக்காட்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
கோடியக்காட்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
நாகை வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோடியக்காடு ஊராட்சி பகுதியில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாக பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில் வனச்சரக அலுவலர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் கோடியக்காடு ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள், சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Related Tags :
Next Story