நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி; ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி; ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போல கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சரின் இந்த உத்தரவினை தொடர்ந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை சார்பில் நெல்லை சாலையில் மரக்கன்றுகள் நடும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணியாளர்களிடம் மரக்கன்றுகளை பத்திரமாக பாதுகாத்து அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, ஜெயக்குமார் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story