அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
வேதாரண்யம் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
வேதாரண்யம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நாகை மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் மரக்கன்றுகயை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர்கள் கார்த்திகேயன், வேலுச்சாமி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மகாகுமார், சதாசிவம், நகர்மன்ற தலைவர்கள் புகழேந்தி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் ராஜா, துணைத்தலைவர் அசோக்குமார் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மாணவர்களுக்கு மஞ்சப்பை, மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.