வழிகாட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்


வழிகாட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்
x
தினத்தந்தி 24 Jun 2023 1:12 AM IST (Updated: 24 Jun 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

வழிகாட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்

தஞ்சாவூர்

கும்பகோணம் காந்தி நகர் அருகே வழிகாட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழிகாட்டி பலகை

கோவில் நகரமான கும்பகோணத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் கார்கள், இருசக்கர வாகனங்களில் வருவதை காணமுடியும்.

அவ்வாறு சாலை மார்க்கமாக வருபவர்களின் வசதிக்காக கும்பகோணத்தின் முக்கிய சாலைகளில் தேவையான இடங்களில் ஊர் பெயர் எழுதப்பட்ட வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பார்த்து சரியான பாதையை வாகன ஓட்டிகள் தேர்ந்தெடுக்க வழிகாட்டி பலகைகள் உதவுகின்றன.

சூழ்ந்துள்ள மரக்கிளைகள்

அதன்படி கும்பகோணம் வருமானவரித்துறை அலுவலர்கள் குடியிருப்பு காந்தி நகர் அருகே சாலையோரத்தில் வழிகாட்டி பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் சுவாமி மலை, ஸ்ரீநகர் காலனி, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் செல்வதற்கான பாதை குறியீடுகள் உள்ளன.

இந்த நிலையில் அந்த வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகளுக்கு உதவ முடியாதபடி அதனை சுற்றி மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இதனால் மரக்கிளைகளுக்குள் வழிகாட்டி பலகை மறைந்த நிலையில் இருக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சரியான பாதை தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வழிகாட்டி பலகையை சூழ்ந்து இருக்கும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story