ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ப்பு
சொக்கநாதபுரம் ஊராட்சியில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் ஊராட்சி சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
சொக்கநாதபுரம் ஊராட்சியில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் ஊராட்சி சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
மரக்கன்றுகள்
சிவகங்கையை அடுத்துள்ளது சொக்கநாதபுரம் ஊராட்சி.இங்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பழ தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் கண்ணன் கூறியதாவது:-
அரசின் மரம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சொக்கநாதபுரம் ஊராட்சியில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1,500 முந்திரி மரகன்றுகள், 100 பலா மரம், 100 ஒட்டு நாவல் மரம் மற்றும் பலவகை பலன் தரும் மரங்கள் நடப்பட்டு உள்ளது. இந்த இடத்திற்கு சொட்டுநீர்பாசன வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மரங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
சீரமைப்பு
இவை வளர்ந்தவுடன் குத்தகைக்கு விடப்பட்டு அதன் மூலம் ஊராட்சிக்கு வருமானம் கிடைக்க வழிமுறை செய்யப்பட்டு உள்ளது. இதே போல பொதுமக்கள் பங்களிப் புடன் தானம் அறக்கட்டளை உதவியுடன் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 3 கண்மாய்கள் தூர்வாரப் பட்டு உள்ளது. அத்துடன் 4 வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.