குரங்கம்மை பரவல் எதிரொலி: ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிப்பு


குரங்கம்மை பரவல் எதிரொலி: ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிப்பு
x

கோவை விமான நிலையத்திற்க்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளதா என்று சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை:

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வெளிநாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற போதிலும் நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளதா? என்று சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை நோய் கண்டறியப்படவில்லை. இருப்பினும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஆப்பிரிக்கா நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று அல்லது அதற்கான அறிகுறி உள்ளதா என்பது குறித்து விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக விமான நிலையத்தில் சுகாதார குழுவினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சோதனையின் போது யாருக்காவது அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.


Related Tags :
Next Story