இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டம்


இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டம்
x

நாகர்கோவிலில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண கூட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார்.

பிரசார பயண கூட்டம்

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் நேற்று முன்தினம் திருச்செந்தூரில் இருந்து தொடங்கியது. இந்த பிரசார பயணம் நேற்று நாகர்கோவில் வந்தது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் முன்பு பிரசார பயணம் கூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த 28-ந் தேதி திருச்செந்தூரில் தொடங்கியது. பிரசார பயணம் ஜூலை மாதம் 31-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. தாணுலிங்க நாடார் தமிழகம் முழுவதும் சென்று இந்துக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினார். பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்துக்களுக்காக பாடுபட்டுள்ளார். இந்த பிரசார பயணம் இந்துக்களை ஒருங்கிணைக்கும். இந்து முன்னணியை நோக்கி இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வருகிற காலம் இந்துக்களின் காலம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாநில பேச்சாளர் அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், நடிகர் கனல் கண்ணன், அய்யாவழி பாடகர் சிவச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

பாடம் புகட்டுவார்கள்

பின்னர் கன்னியாகுமரியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருக்கிற அமைச்சர் மனோதங்கராஜ் கோவிலுக்குப் போய் தேர் இழுப்பதும், கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்வதுமாக செயல்பட்டு வருகிறார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும், தேர் இழுக்க வேண்டும் என்றால் இந்துவாக மாறி இதையெல்லாம் செய்யட்டும்.

தமிழக அரசு இந்துக்களின் மன நிலையை புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தவாறு செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு வருகிற 2024 மற்றம் 2026 தேர்தல்களில் இந்துமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story