புகையிலை பொருட்கள் சிக்கியது; 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் சிக்கியது; 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது,. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு நாகசங்கர் மேற்பார்வையில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ள பாண்டி ஆகியோர் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து ஆட்டோவில் இருந்த குற்றாலத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சுரேஷ் (வயது 31), ஆட்டோவை ஓட்டி வந்த கீழப்புலியூரைச் சேர்ந்த சதீஷ் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது புகையிலை பொருட்கள் கரடிகுளத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும், மேலும் அங்கு புகையிலை பொருட்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதன் அடிப்படையில் போலீசார் கரடிகுளம் சென்று மேலும் இருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இதுெதாடர்பாக கரடிகுளத்தை சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ் (31) என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக கொண்டு வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.


Next Story