போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி.தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
அதேபோல் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story