ரூ.10 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர்கள்
பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீரான மின்சார வினியோகம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை போக்கும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தரவேண்டும் என திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்ட எம்.எல்.ஏ. மின்வாரிய அதிகாரிகள் மூலம் பூண்டி பஸ் நிறுத்தம் மற்றும் பூண்டி ஜெயராமன் தெரு போன்ற பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் டிரான்ஸ்பார்மர்களை அமைக்க ஏற்பாடு செய்தார். அதை தொடர்ந்து டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டிரான்ஸ்பார்மர்களை திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி இயக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி குறைகளை கேட்டறிந்தார். அவருடன் பூண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிறிஷ்டி என்கின்ற அன்பரசு, பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால், மாவட்ட கவுன்சிலர் சிவசங்கரி உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் விஜி, காஞ்சிபாடி சரவணன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், பட்டரை பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.