டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருட்டு


டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருட்டு
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள், ஆயிலை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள், ஆயிலை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

டிரான்ஸ்பார்மரில் திருட்டு

தேன்கனிக்கோட்டை அருகே எலசட்டி மற்றும் தளி சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் மற்றும் காப்பர் கம்பிகள் திருட்டு போனது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நாகமங்கலம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் மாரப்பன் (வயது 22), சாக்கப்பன் மகன் முனியப்பா என்கிற சேட்டு (22) ஆகிய 2 பேரும் டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி மற்றும் ஆயிலை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணை

இதேபோல் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே கிறிஸ்துபாளையம் செல்லும் சாலையில் 2 டிரான்ஸ்பார்மர்களை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காப்பர் கம்பிகள், ஆயிலை திருடி சென்றனர். மேலும் தளி அருகே மதகொண்டப்பள்ளியில் இருந்து சொல்லேபுரம் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகள், ஆயிலை மர்ம நபர்களை திருட முயன்றனர்.

இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ், தளி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி

சூளகிரி அருகே மாதசனப்பள்ளியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்த 180 கிலோ காப்பர் கம்பி, 253 லிட்டர் ஆயில் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து உதவி பொறியாளர் கார்த்திகேயன் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story