டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த விற்பனையாளர் இடமாற்றம்


டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த விற்பனையாளர் இடமாற்றம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 5:00 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த விற்பனையாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாச்சியார்புரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த 6-ந்தேதி காளத்திமடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரான விஜயகுமார் என்பவர் மதுபாட்டில் வாங்கினார். அப்போது அந்த மதுபாட்டிலுக்கான விலை ரூ.260-க்கு பதிலாக கூடுதலாக ரூ.5 சேர்த்து விற்பனையாளர் ஆதிமூலம் என்பவர் வசூலித்ததாகவும், மேலும் மதுபாட்டிலுக்கான விலை ரூ.265 என்றும் ரசீது வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மதுபாட்டிலில் குறிப்பிடப்பட்ட விற்பனை விலையை விட ரூ.5 கூடுதலாக வசூலித்து ரசீது வழங்கியது குறித்து விஜயகுமார் வாட்ஸ்-அப் மூலம் நெல்லை டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு புகார் அனுப்பினார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அவர், டாஸ்மாக் விற்பனையாளர் ஆதிமூலத்துக்கு ரூ.5,900 அபராதம் விதித்ததுடன் அவரை நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.



Next Story