அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை இடமாற்றம்


அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை இடமாற்றம்
x

பாளையங்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 76 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். புதிதாக சிலைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பந்தல் அமைத்து அங்கு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதனை அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அந்த சிலையை அகற்ற கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்து சிலை அப்புறப்படுத்தப்பட்டு அருகே உள்ள மற்றொரு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கிடையே அனுமதியின்றி சிலை வைத்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக பாளையங்கோட்டை முத்தாரம்மன்கோவில் தெருவை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி கார்த்திக் நாராயணன் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story