சேலம் சரகத்தில் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


சேலம் சரகத்தில்  35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x

சேலம் சரகத்தில் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், சேலம் மாவட்டம் காரிப்பட்டிக்கும், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, எடப்பாடிக்கும், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கமலகண்ணன், வீரகனூருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தலைவாசலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 19 பேர் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பிரவீன்குமார் அபினவு நேற்று பிறப்பித்துள்ளார்.

இதேபோல், கோவை மேற்கு மண்டலத்தில் பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்த 16 இன்ஸ்பெக்டர்கள் சேலம் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஏற்காட்டிற்கு செந்தில் ராஜ் மோகன், ஜலகண்டாபுரத்திற்கு ஆனந்தராஜ், ஓமலூருக்கு வெங்கடேஷ் பெருமாள், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வளர்மதி, கொங்கணாபுரத்திற்கு விஜய சாரதி உள்பட 16 இன்ஸ்பெக்டர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story